Saree Offers today | வெறும் ரூ50-க்கு சேலையா? - கைமீறும் அளவுக்கு அலைமோதும் கூட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மகளிர் தினத்தையொட்டி 50 ரூபாய்க்கு சேலை விற்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலை வாங்க வருபவர்களுக்கு இன்ஸ்டாவில் கணக்கு இருக்க வேண்டும், தங்கள் நிறுவனத்தை பின்தொடர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் இன்ஸ்டா கணக்கு இல்லாதவர்கள் கூட உடனடியாக அங்கேயே கணக்கை தொடங்கி, 50 ரூபாய்க்கு சேலை வாங்கி சென்றனர்.