நகைக்கடைக்குள் புகுந்து அடாவடித்தனம்.. மிரண்டு போய் நின்ற உரிமையாளர்கள்.. தர்மபுரி அருகே பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் கடை உரிமையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி இன்று வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - கடை உரிமையாளர்களை தாக்கும் சிசிடிவி காட்சி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கடத்தூரை சேர்ந்த நாகராஜ் குப்தா என்பவர் அரூர் செல்லும் சாலையில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார் ,
இந்தநிலையில் கடத்தூர் கருப்பண்ண கவுண்டர் தெருவை சேர்ந்த அன்பு இவர் சனிக்கிழமை நாகராஜ் குப்தாவின் கடைக்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும்,அவரை அடித்துள்ளார் ,
அதனை தடுக்க வந்த கடை ஊழியர்களை அடித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் கடைவீதி பகுதியில் உள்ள ராமநாதன் என்பவரின் ஜவுளிகடைக்கு சென்று, அங்கு பணியாற்றும் ஊழியர்களை திட்டி, மற்றொரு ஜவுளிக்கடை உரிமையாளர் விமல் என்பவரை அடித்தும், கடை கண்ணாடியை உடைத்துள்ளார்.
தொடர்ந்து ஜவுளிக்கடை உரிமையாளர் புஷ்பக் என்பவரின் தந்தை மனோகரன் உள்ளிட்ட 2 பேரை தாக்கியுள்ளார் இதையடுத்து அன்பு மீது பாதிக்கப்பட்டவர்கள் கடத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வியாபாரிகளின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலை கண்டித்தும், இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடத்தூர் வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஒண்றினைந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது,
கடையில் புகுந்த கடை உரிமையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் செய்யும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது,
மேலும் அன்பு என்பவர் இது போன்று பலமுறை கடை உரிமையாளர்களை தாக்குவதும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த வணிகர்கள் அன்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்