Rishab Shetty | "தமிழ்நாட்லயும் இருக்கு.." -சாமி தரிசனம் செய்த பின் நடிகர் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், காந்தார பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Kantara Chapter 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் டப்பிங்காக வெளியாகிய அப்படம், பெரிய வெற்றி பெற்று இருப்பதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் கூறியுள்ளார். பின்பு, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.