அன்புமணியை நேரில் சந்தித்த ராமதாஸின் P.A. - காத்திருக்கும் அரசியல் பிரேக்கிங்

Update: 2025-08-02 04:51 GMT

பாமக மகளிர் மாநாடு அழைப்பிதழிலும் அன்புமணி பெயர் தவிர்ப்பு

பாமக மகளிர் மாநாடு அழைப்பிதழிலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் பெயரும் படமும் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மகளிர் மாநாடு, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு, ராமதாஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில் அன்புமணியின் பெயர், படங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மகளிர் மாநாட்டு அழைப்பிதழிலும் அன்புமணியின் பெயரும் படமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ராமதாஸ் தரப்பிடம் கேட்டபோது, அன்புமணிக்கு ராமாதாசின் உதவியாளர் சுவாமிநாதன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்