Pudukkottai Incident | ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய சம்பவம் | ரவுடியை தட்டி தூக்கிய போலீசார்

Update: 2026-01-02 04:01 GMT

ரயில்வே கேட் கீப்பர் மீது கத்தியால் தாக்குதல்- ரவுடி கைது

புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் ரயில்வே கேட்டில், கேட் கீப்ரை ரவுடி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேட் கீப்பராக பணிபுரியும் பீகாரை சேர்ந்த தீரஜ்குமார், ரயில் வருவதற்கு முன் கேட்டை மூடியபோது, அங்கு வந்த உள்ளூர் ரவுடி கார்த்திக், கேட்டை திறந்து விடுமாறு கூறி தகராறு செய்து, கத்தியால் தாக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, கார்த்திக்கை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததுடன், தீரஜ் குமாரை காரைக்குடி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்