அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இளைஞரிடம் பெண் போல நடித்து, திருமண ஆசை காட்டி, 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடத்தைச் சேர்ந்த பார்த்திபன், வரன் தேடும் இணைய பக்கத்தில் தனக்கு பெண் தேடினார். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்த அசார், பார்த்திபனை தொடர்புகொண்டு பெண் போல பேசி, பணமோசடி செய்து சிக்கியுள்ளார்.