ராணிப்பேட்டையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பெண்ணின் குடும்பத்தினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நெமிலி மேட்டுப் பகுதியை சேர்ந்த வேல்விழியும், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இளைஞரின் பெற்றோர் பெண்ணின் நடத்தை குறித்து தவறாக பேசி பிரபாகருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.