கரூர் கூட்ட நெரிசல் - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

Update: 2025-12-11 09:54 GMT

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த அக்டோபர் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் உயர்நீதிமன்ற அமைத்த எஸ்ஐடியும்,மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடரட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றம் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்