Pongal Special Trains | பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் விரைவில் வெளியாகும் குட் நியூஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் , திருநெல்வேலி, கோவை, மங்களூரு, ராமேஸ்வரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயிகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே வழக்கமான ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்த நிலையில் சிறப்பு ரயில்கள் குறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.