சென்னை நொளம்பூர் காவல் நிலைய காவலரை தாக்கியதாக பாமக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொடர்பாக ஏற்பட்ட தகராறை தீர்த்துவைக்க நொளம்பூர் காவல் நிலைய காவலர் பாலாஜி சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பாமக வழக்கறிஞர் வெங்கடேசன், பாலாஜியையும் பெண் காவலரையும் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் தலைமறைவான அவரை எழும்பூரில் போலீசார் கைது செய்தனர்.