அமெரிக்காவில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் நியூயார்க்கில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. சபையின் 80-ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 23 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் பொது விவாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவிருப்பதாக கூறப்படுகிறது.