ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்றாவது சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த லவ்டேல் முதல் ஃப்ர்ன் ஹில் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குன்னூர், கோத்தகிரி மலைப்பாதை பயன்பாட்டில் இருக்கும் நிலையில், 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை அடுத்த மூன்று மாதத்தில் முடிவடையும் என்று நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.