விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் அம்மனுக்கு பூச்சட்டி எடுத்தும், மாறுவேடம் பூண்டும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், தேர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.