சாலையில் நின்ற லாரி மீது மோதிய கார்.. சிதைந்த கேரள குடும்பம் - அபாய கட்டத்தில் 2 உயிர்
பழனி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பழனிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது உடுமலை அடுத்த வயலூர் புறவழிச்சாலையில் கார் சென்றபோது, சாலையோரத்தில் நின்ற லாரியின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த தந்தை, அவரது 2 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த மனைவி, மற்றும் மற்றொரு பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.