சாலையில் கெத்தாக உலாவிய புலி - பீதியில் மக்கள் | Tiger | Ooty | Thanthi TV
உதகை அருகே குந்தா மின்வாரிய பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். குந்தா நீர் மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு பகுதி அருகே சாலையில் புலி நடமாடியதை வாகன ஓட்டி வீடியோ எடுத்துள்ளார். வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தை பார்த்தவுடன் அசராமல் நின்ற புலி, வனப்பகுதிக்குள் செல்ல முயன்றது. எனினும், அந்த வழியாக செல்ல முடியாததால், மீண்டும் சாலையில் நடமாடிய புலி அடுத்த சில நிமிடங்களில் காட்டுப்பகுதிக்குள் ஓடியது. எனினும், புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.