Online Order | ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய 15 இளைஞர்கள் அதிரடி கைது - வேலூரில் பரபரப்பு

Update: 2025-09-12 08:37 GMT

ஆன்லைனில் போதை மாத்திரை, போதை ஊசிகள் வாங்கிய 15 பேர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் ஆன்லைனில் போதை மாத்திரைகளையும், போதை ஊசிகளையும் வாங்கிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் வைத்திருந்த 400 மாத்திரைகளும், 5 ஊசிகளும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 11 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்