Old Lady ``மண்டையில் உறைந்த ரத்தம்; பற்கள் உடைப்பு’’ - 11 நாட்களுக்கு பின் தோண்டி எடுக்கப்படும் உடல்
11 நாட்களுக்குப்பின் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, 11 நாட்களுக்குப்பின் மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பெரிய வண்ணங்குப்பம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி பிரேமா. இவர், கடந்த 11ஆம் தேதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போது இறுதிச்சடங்கிற்கு வந்த பிரேமாவின் தங்கை, தனது அக்காவின் தலையின் பின்பகுதியில் இரத்தம் உறைந்துள்ளதை, அவரது பற்கள் முழுவதும் உடைந்து இருப்பதையும் கவனித்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பிரேமாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.