நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..சில்லு சில்லாய் நொறுங்கிய கண்ணாடி-தஞ்சையில் அதிர்ச்சி
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
தஞ்சையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
கரந்தை சி.ஆர்.சி டெப்போ பேருந்து நிறுத்த பகுதியில் கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஜெயங்கொண்டத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.
இதில், தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் லேசான காயமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.