"மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

Update: 2025-07-13 02:16 GMT

மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி மேம்பாலம் அருகே, வண்ண மீன்கள் விற்பனை வர்த்தக மையத் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கூடங்குளம் அருகே தவெக கொடியின் வண்ணம் பூசியிருந்த படகுகளுக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு நிர்ணயித்துள்ள வண்ணத்திற்கு பதில் வேறு வண்ணம் பூசப்பட்டிருந்த படகுகளுக்கு மட்டுமே மானியம் மறுக்கப்பட்டது என்றும், அவர்களும் சரியான வண்ணத்தை பூசியதால் மானியம் வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்