தெருநாய்களிடம் சிக்கிய பிறந்த குழந்தை.. தலையை தவிர அனைத்து உறுப்பையும் தின்ற கோரம்
தெருநாய்களிடம் சிக்கிய பிறந்த குழந்தை.. தலையை தவிர அனைத்து உறுப்பையும் தின்ற கோரம்
அரசு மருத்துவமனை அருகே குப்பையில் நாய் கடித்து குதறிய சிசு மீட்பு
அரசு மருத்துவமனை அருகே தெருநாய்கள் கடித்து குதறிய சிசு மீட்பு - அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவமனையின் நுழைவாயில் அருகே, பிறந்து ஒருநாளே ஆன, சிசுவின் உடலை குப்பையில் வீசிச் சென்ற அவலமும், அந்த உடலை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவமும் மனதை ரணமாக்கி உள்ளது. இதில் பச்சிளம் சிசுவின் தலையைத் தவிர, உடல் பகுதி முழுவதையும் தெருநாய்கள் கடித்து குதறின. இதை அடுத்து, ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்த, எஞ்சிய சிசுவின் தலைப்பகுதியைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியுடன் இதுபற்றி மருத்துவமனை காவலாளிக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த மருத்துவமனையில் யாரேனும் சிசுவை திருடி சென்றனரா? அல்லது சிசுவின் தாயோ அல்லது உறவினர்களோ சிசுவை இவ்வாறு வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், ஏறக்குறைய 30 மணி நேரத்திற்குள் குழந்தை பிரசவித்த தாய்மார்களின் விபரம் உள்ளிட்டவை குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.