10, +2 தேர்வுகளில் தொடர்ந்து சாதிக்கும் நெல்லை எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா சீனியர் செகண்டரி பள்ளி
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா சீனியர் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 12ம் வகுப்பில் மாணவன் பிரஜேஷ் குமார் 494 மதிப்பெண்களும், மிதுன் நாகேந்திரா 479 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 14 மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண்களை பெற்று சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போன்று பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் தேவ சகாய ஆண்ட்ரியா என்ற மாணவி 489 மதிப்பெண்களையும், மாணவி ஹன்சிகா 486 மதிப்பெண்களையும், மாணவர் ஜெய்வந்த் 480 மதிப்பெண்களையும் பெற்று சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் கிரகாம்பெல், எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திவாகரன், சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் அஜேஸ் லால், பள்ளி முதல்வர் பாலபெஞ்சமின், பள்ளி நிர்வாகி பிந்துஜா ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.