MBBS, BDS படிப்புகளுக்கான NEET கலந்தாய்வு - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-07-21 13:27 GMT

Medical Counselling | Placement | MBBS, BDS படிப்புகளுக்கான NEET கலந்தாய்வு - வெளியான முக்கிய அறிவிப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் துவங்கியது...தேசிய அளவிலான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இணைய வழியில் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 28ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய, 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி 4 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... தற்காலிக கல்லூரி ஒதுக்கீடு ஆணைகள் வரும் 29, 30 தேதிகளில் வழங்கப்படும். இறுதி முடிவுகள் வரும் 31 ஆம் தேதியில் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 6ம் தேதிக்குள் துவங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது... நாடு முழுவதும் எம்.பி.பிஎஸ் படிப்பில் சேர 1 லட்சத்து 18 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் பங்கேற்க 12 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்