Bus Accident | ஒருபக்கம் குப்புற கவிழ்ந்த லாரி.. இன்னொரு பக்கம் நொறுங்கிய ஆம்னி பஸ் - 7 பேர் நிலை
சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில், ஆம்னி பேருந்தின் ஒரு பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
விபத்தில் காயம் அடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்னி பேருந்து விபத்து புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.