கனமழையால் நிலச்சரிவு - 16 பேர் பலி
கிணியாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா கினியா தலைநகர் கொனாக்ரியில் இரவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில், வீட்டுகளில் உறங்கிகொண்டிருந்த 16 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மண்ணில் புதைந்துள்ளவர்களை தேடும் பணியில் அந்நாட்டு மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் சிக்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.