Namakkal | Jallikattu 2026 | வீரர்களை திணறடித்த காளைகள் | கோலாகலமாக நாமக்கலில் தொடங்கிய ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் இந்தப் போட்டியினை ராஜேஷ்குமார் எம்.பி தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வருகின்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், ரொக்கப்பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.