Karur | CBI | கரூரில்... வாடிவாசலுக்கு திடீர் விசிட் அடித்த CBI அதிகாரிகள்

Update: 2026-01-18 13:47 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சிபிஐ அதிகாரிகள் கண்டுகளித்தனர்.

ஜல்லிக்கட்டு விழா கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் 729 காளைகள், 269 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள், பொங்கல் தின விடுமுறையால் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிபிஐ அதிகாரிகளை வரவேற்று ஜல்லிக்கட்டு வாடிவாசல் மேடையில் அமர வைத்து தேநீர் கொடுத்து ஜல்லிக்கட்டு குறித்து விளக்கினார்... சிபிஐ அதிகாரிகள் போட்டியை கண்டு களித்து தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்