பரமக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை
ராமநாதபுரம் அருகே இளைஞர் வெட்டி கொலை
செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். பிளக்ஸ் போர்டு பிரின்டிங் கடையில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 11ம் தேதி இரவு, பணியை முடித்துவிட்டு நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் கத்தியால் குத்த முயன்றபோது கார்த்திக் தப்பி ஓடிய நிலையில் மூவரும் விரட்டி சென்று, அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.