பணம் இரட்டிப்பு மோசடி - பூசாரி உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, கருப்பு தாள்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை , தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மாதம்மாள். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியில் காளியம்மாள் கோயிலில் உள்ள பூசாரி ரவி, மாதம்மாளிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவாக கூறி 50 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார். பின்னர் கருப்பு தாள்களை தந்து, இதில் கெமிக்கலில் நனைத்தால் 500 ரூபாய் தாளாக மாறிவிடும் என கூறியுள்ளார். ஆனால் கருப்பு தாள்களை மட்டும் தந்தவர்கள், கெமிக்கலை தரவில்லை. இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாதம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பூசாரி ரவி, அவருக்கு உதவியாக இருந்த நஞ்சுண்டன் மற்றும் பிரபு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.