உண்மையை அம்பலப்படுத்தியதால் கொடூர கொலை - பண முதலை நிகழ்த்திய பயங்கரம்.. உலுக்கும் கடைசி வீடியோ

Update: 2025-01-22 05:46 GMT

கனிமவள கொள்ளையை எதிர்த்து வந்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட குவாரியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் பல திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள கனிமவள கற்கள் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார் கொடுத்த சமூக ஆர்வலரும் அதிமுக பிரமுகருமான ஜெகபர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது

எதிர்கட்சி தலைவர் தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்களும் நடந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க தொடங்கியது மாவட்ட நிர்வாகத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள வெங்காளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகபர் அலி. அதிமுகவின் முன்னாள் கவுன்சிலராகவும், சமூக ஆர்வலராகவும் செயல் பட்டு வந்தார்.

துளையானுர் பகுதிகளில் ஏராளமான கனிமவள குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், இவற்றின் மூலமாக ஏராளமான கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வருவதாகவும் தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை தொடர் புகார்களை அளித்து வந்து இருக்கிறார்.

இதனால் கனிம வள குவாரிகளை நடத்தி வந்தவர்களுடன் ஜெகபர் அலிக்கு விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கனிம வள கொள்ளைகளை அதிகாரிகள் தடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எந்த நாளில் தெரிவித்தாரோ அதே நாளில் லாரி மோதி விபத்தில் பலியானார்.

ஆனால் நடந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜெகபர் அலியின் மனைவி புகார் அளித்தார். தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு நடந்தது விபத்து அல்ல,திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள ஆர்.ஆர் குவாரியின் உரிமையாளர் ராசு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கனிம வள அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கனிமவள குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடங்களாக ஆர்.ஆர். குவாரி உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உரிமம் இல்லாமல் இயங்கி வருவதை கண்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட குவாரிக்கு சுமார் 18 கோடி வரை அபராதம் விதித்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்த வந்த கனிமவள அதிகாரிகள் சம்மந்தப்பட்ட குவாரிகளில் எந்த அளவிற்க்கு சட்டவிரோதமாக கற்கள் தோண்டி எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் மதுரை மேலூர் பகுதிகளில் இயங்கி வந்த குவாரிகளில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் மூலமாக அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வந்த செய்தியும் அதன் பின்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட குவாரிகள் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ள நிலையில் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளி கொண்டு வரலாம் என சமூல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்