பிரபல ஷோரூமில் தங்கம், வெள்ளி நாணயங்கள், பணத்தை திருடிய முகமூடி திருடன்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரபல எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த தங்க காயின்கள், வெள்ளி காயின்கள் மற்றும் பணத்தை முகமுடி அணிந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஷோரூமின் கிளை மேலாளர் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.