Manapparai | Theft | "குடும்பத்தையே கட்டிப்போட்டு கழுத்துல கத்திய வச்சி.." -சினிமா பாணியில் பயங்கரம்
"உண்மையை சொல்லு இல்லனா போட்ருவேன்.. குடும்பத்தையே கட்டிப்போட்டு கழுத்துல கத்திய வச்சி.." - சினிமா பாணியில் பயங்கரம்.. உயிர் பயத்தில் பேசிய தந்தை
#Manapparai #theft #thanthitv
குடும்பத்தையே கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை
மணப்பாறை அருகே தோட்டத்து வீட்டில் கணவன் - மனைவியை கட்டிப்போட்டு பணம், நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணியங்குறிச்சியில் களத்து வீட்டில் குடும்பத்துடன் வசிப்பவர் அமர்ஜோதி. இரவு தூங்கச்சென்ற போது வாழைத் தோட்டம் வழியாக மங்கி குல்லா அணிந்து வந்த திருடர்கள், அமர்ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்துள்ளனர்.