திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாத்தாபாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் இரும்பு தீக்குழம்பு சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். மேலும் மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.