திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய தூண்டிகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான தூண்டிகை விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் இந்த தூண்டிகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, முருகனை தரிசிப்பது வழக்கம். 16 ஆண்டுகளுக்குப் பிறகு தூண்டிகை விநாயகர் கோயிலில் தற்போது கும்பாபிஷேகம் நடந்துள்ளது