மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் டங்ஸ்டன் எதிர்ப்புக் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து, திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அரிட்டாபட்டி பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.