திருத்தணியில் பக்தர் கண்ணீர்.. `கடவுள் வடிவில்’ வந்த குழந்தைகள்.. போலீசே வியப்பு
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையை சேர்ந்த கவுதம் என்பவர் கையில் தாம் அணிந்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க காப்பை காணவில்லை என்று மலைக்கோவில் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது ஆர்.கே.பேட்டையை சேர்ந்த பவித்ரா, ரேணுகா என்ற சகோதரிகள் வந்து கார் பார்க்கிங் பகுதியில் காப்பு கிடந்ததாக கூறி அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை, நகையை தவறவிட்ட பக்தர் குடும்பத்தினர் மற்றும் போலீசார் பாராட்டினர்.