தடை நீக்கம்... வெளியான உற்சாக செய்தி

Update: 2025-07-29 15:34 GMT

சுருளி அருவியில் ஐந்து நாட்களுக்குப் பின்னர் தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த ஐந்து நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்