நிலப்பிரச்சினை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தனது நிலத்தை உதயகுமார் என்பவர் ஆக்கிரமித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படையை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாக மாரிமுத்து குமுறினார்.