``அய்யோ நெஞ்சு வலிக்கிதே.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க'' - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-12-31 03:08 GMT

கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில், காங்கிரஸை சேர்ந்த மேயர் சரவணன், கூட்டம் நாளை நடைபெறும் என ஒத்திவைத்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர் சுகாதாரக் குழு தலைவர் குட்டி தெட்சிணாமூர்த்தி, மேயரை தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தன்னை தாக்கியதாக கூறி கீழே விழுந்த மேயர், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர் சரவணன் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்ற மாமன்ற உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி, மேயர்தான் தன்னை தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்