Thiruchendur | களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் - ஆரவாரத்தோடு பஜனை பாடிய பெண்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இரண்டாம் நாளாக நடைபெற்றன. 76 வேள்வி குண்டங்களுடன், 8 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலையில் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. பின்னர் திரவிய பூர்ணாகுதி, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.