வண்டி முழுதும் இருந்த முட்டை - மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி பிரிவு சாலை பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரசு முத்திரையிட்ட முட்டை சரக்கு வாகனத்தில் வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.. இதையடுத்து வண்டியை பறிமுதல் செய்து போலீசார் அதிலிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு பள்ளிகளுக்கு கொள்முதல் செய்த போது தரம் குறைவானவை என நிராகரிக்கப்பட்ட முட்டைகளை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது அம்பலமானது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.