பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியர் கவின், காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கவின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் 24 மணி நேரமும் சந்திரசேகருடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.