Karur | கடவுளிடம் நேரடியாக பேசாமல் சுற்றிவளைத்து பேச முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

Update: 2025-10-04 03:08 GMT

சாமி ஆடி பெண்ணிடம் 5 லட்சம் மோசடி - சாமியார் கைது குளித்தலையில் சாமியாடி, பெண்ணிடம் 5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில், பிரவீனா என்பவர் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என சக்திவேல் என்கிற சாமியாரிடம் சென்றுள்ளார். அப்போது, தாய்க்கு ஏற்பட்டுள்ள உடல்நிலையை சரிசெய்ய 10 லட்சம் ஆகுமென அந்த நபர் கூறியுள்ளார். இதை அடுத்து பிரவீனா 5 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தாய்க்கு உடல்நிலை சரியாகாததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணம் திருப்பி தர முடியாது என சக்திவேல் கூறியதை அடுத்து பிரவீனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சாமியார் சக்திவேல் கைது செய்யப்படுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்