Kallakurichi | Aavin |"எதுவும் குறை சொல்ற மாதிரி இல்லை.." - வந்த புதிய திட்டம்.. குஷியில் மக்கள்
மலையில் பால் கொள்முதல் நிலையங்கள் - பயனுள்ள முயற்சியில் ஆவின் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பால்கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அப்பகுதியினருக்கு புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது ஆவின் நிர்வாகம்... மேல்முருவம், நடுதொரடிப்பட்டு, கொட்டபுத்தூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக 20 கிராம விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் பயன்பெறுகின்றனர். மேலும் கரியாலூர் பகுதியில் பால் குளிருட்டு நிலையம் அமைத்துள்ளனர். தற்போது ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நிலையில், இத்திட்டம் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.