Joy Alukkas Jewellers | ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமனம்

Update: 2025-10-07 12:42 GMT

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல நகைக்கடை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ், புதுப்புது டிசைன்களை சந்தையில் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த சூழலில், நிறுவனத்தை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக, தங்களது நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நடிகை சமந்தா இணைந்துள்ளதாக அறிவித்துள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், சமந்தாவின் என்ட்ரி சர்வதேச அளவில் தங்களது நிறுவனத்தை கோலோச்ச வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நகைக்கு பின்னால் கொண்டாட்டம், உணர்ச்சி, பலம் என மிகப்பெரிய கதை இருக்கும் சூழலில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இதை அப்படியே பிரதிபலிப்பதாக சமந்தா நெகிழ்ந்துள்ளார். ஜாய் ஆலுக்காஸ் உடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் தூதராக இணைந்த நிலையில், தற்போது சமந்தாவை தூதராக நியமித்து நிறுவனத்தை மேலும் பிரபலப்படுத்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஆயத்தமாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்