ஜல்லிக்கட்டு - காளை முட்டியதில் விராலிமலை காவல் ஆய்வாளர் படுகாயம்

Update: 2025-04-02 13:33 GMT

இருந்தாபட்டி,புதுக்கோட்டை


ஜல்லிகட்டு போட்டியில், காளை முட்டியதில் விராலிமலை காவல் ஆய்வாளர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இருந்தாபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை, பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகரனை வயிற்றில் முட்டியது. இதில் படுகாயம் அடைந்த ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்