Iridium | தமிழகத்தை மிரளவிட்ட ரூ.1000 கோடி.. IT ஊழியரிடம் மட்டுமே ரூ.2 கோடி.. உருளும் பெருந்தலைகள்
இரிடியம் விற்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஐ.டி. ஊழியரிடம் 1 கோடியே 87 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் அவரை கோவையை சேர்ந்த சுனில் தொடர்புகொண்டு இரிடியம் தொடர்பாக ஆசை வார்த்தை கூறி 1 கோடியே 87 லட்ச ரூபாய் வரை கறந்தார். இதற்கு கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சரத்குமார் உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்தனர். இந்நிலையில், சரத்குமார் தன் நண்பருடன் இரிடியத்தைக் கடத்தி சென்றுவிட்டதாகவும், அவர் மத்திய அமைச்சரின் மகன் என்றும் சுனில் நாடகமாடியுள்ளார். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஐ.டி. ஊழியர் மதுரை போலீசில் அளித்த புகாரின்பேரில் சரத்குமார், சுனில், வருண்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.