மனித நேய அறக்கட்டளையில் படித்த 35 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி

Update: 2025-04-23 02:06 GMT

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிநேய மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற பல மாணவ-மாணவியர் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி நேர்முகத்தேர்வில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த சிவசந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23-வது இடமும், மோனிகா என்பவர் 39-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்