நாய்கடித்து 4 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை"
சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை நடவடிக்கை இல்லையென புகார் எழுந்துள்ளது. ஜாபர்கான் பேட்டை, விஎஸ் எம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். பிட்புல் ரக நாய் கடித்ததில் இவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நாயை வளர்த்த அதன் உரிமையாளர் பூங்கொடி இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையென அருகில் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.