பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு முகாம்
சென்னை, எழும்பூர் அரசு பள்ளியில், ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து, ரயில்வே பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இதில், மாணவர்கள் ரயிலில் பயணம் செய்வது குறித்தும், ஓடும் ரயிலில் ஏறுவது குறித்தும், ரயில் தண்டவாளங்களை கடக்க கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும், ரயில் பயண விதிகளை மாணவர்களுக்கு தெளிவுபடுத்திய ரயில்வே போலீசார், மின் தூக்கிகள், சுரங்கப்பாதைகள், நகரும் மின் ஏணி உள்ளிட்டவற்றை பயன்படுத்து குறித்தும் வலியுறுத்தினர்.