வெவ்வேறு இடங்களில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

Update: 2026-01-09 03:04 GMT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாலையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் கணவனும், அவருடைய 2வது மனைவியும் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.,

அதே நேரத்தில், யாகப்பன்பட்டியில் சேசுராஜின் இரண்டாவது மனைவியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஜேசுராஜ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் ஜாமினில் வெளிவந்த ஜேசுராஜை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.

இருவரையும் கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்